June 28th, 2007
செஸ் ஆர்வலர்களுக்கான ஒரு வலைத்தளம் பற்றி என்னோட முந்தின போஸ்டில் சொல்லிருந்தேன். அதை இன்னும் முழுசா, ஒழுங்கா பண்ணனும்னு நானும் என்னோட ஃப்ரண்ட் KCயும கொஞ்சம் பெரிய லெவல்ல யோசிச்சிட்டுருக்கோம். இதை பண்ணுறது நிச்சயம் அவ்வளவு சுலபமா இருக்க போறது இல்லை, அதுவும் ஆஃபீஸுக்கும் வீட்டுக்கும் போக மிஞ்சற நேரத்துல இதை பண்ணனும். இதுக்காக புதுசா Flash, Drupal பத்தியெல்லாம் என்னமோ எக்ஸாம்முக்கு படிக்கற மாதிரிதான் நாங்க படிச்சுண்டுருக்கோம் (அதாவது, புக்கை ஓப்பனே பண்ண மாட்டோம்னு அர்த்தம்!
)
இத்தனைக்கும் நடுவுல இந்த ப்ளாக்கை அப்டேட் செய்யறதுன்றது ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. அதுனால இந்த தளத்தோட ஃபோகஸ்சை மாத்திடலாம்னு பார்க்கறேன். இந்த ப்ளாக்குன்னு இனிமே ட்யூட்டரோ, ஒரு பெரிய ஆர்டிகிளோ எழுதப்போறது இல்லை. இந்த ப்ளாக்கை இனிமே முழுவதும் என்னோட personal chess improvementடை track பண்ணுறதுக்குன்னு யூஸ் பண்ண போறேன். அப்பப்ப சில டோர்னமெண்ட்களில் இருந்து ஒண்ணு இரண்டு ஆட்டங்களை இங்க பாயிண்ட் அவுட் பண்ணறதோட நிப்பாட்டிக்கலாம்னு இருக்கேன்.
BTW, Dortmund 2007 & Aerosvit டோர்னமெண்ட்கள் நடந்துண்டு இருக்கு. மறக்காம ஃபாலோ பண்ணுங்க.
Share This
Posted in Chess | 3 Comments »
June 4th, 2007
செஸ் பற்றி விவாதிக்க மற்றும் செஸ் கற்றுத்தரும் ஆர்டிகிள்களை ஒரே இடத்தில் சேர்க்க ஒரு வலைத்தளம் ஒன்று செட் பண்ணிருக்கேன். இதை ஒரு forumsசா செட் பண்ணினதின் காரணமே எல்லாரும் அவங்கவங்களுக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கலாமேன்னுதான். உங்களுக்கு தெரிஞ்சதை நீங்க தமிழிலோ ஆங்கிலத்திலோ இங்கே போஸ்ட் பண்ணீங்கன்னா என்னைய மாதிரி இரு இரண்டு பேரு அதை படிச்சு பார்த்து ஏதாவது புதுசா தெரிஞ்சுப்போம். So, இன்னிக்கே ரெஜிஸ்டர் பண்ணுங்க, ஒரு ஆர்டிகிள் போஸ்ட் பண்ணுங்க!
Share This
Posted in Chess | 13 Comments »
June 1st, 2007
பாகம் 1ல் நாம் கட்டங்களின் பெயர்களை பற்றியும், காய் நகர்த்தலை எப்படி குறிப்பது என்றும் பார்த்தோம். இந்த பாகத்தில் நாம் கீழே இருப்பவைகளை எப்படி குறிப்பது என்று பார்ப்போம்.
- வெட்டுதல்
- கேஸ்ட்லிங் (ஷார்ட் மற்றும் லாங்)
- இராஜாவுக்கு செக் வைத்தல்.
- சிப்பாய் கடைசி ரேங்கினை சென்றடைந்து மற்றொரு காயாக மாறுவது
- மற்ற ஆட்டக் குறியீடுகள்
முதல்ல காய் வெட்டுதலை குறிப்பதற்கு ஒரு டெம்ப்ளேட் ரெடி பண்ணுவோம். “X” என்பது வெட்டுவதை குறிக்கும்.
{Piece குறியீடு}{இருக்கும் இடம்} X {வெட்டப்பட்ட காய் இருக்கும் கட்டம்}
இப்பொ இந்த டெம்ப்ளேட்டை எப்படி உபயோகப்படுத்தறதுன்னு பார்ப்போம்.

[படம் 1]
படம் 1ஐ பாருங்கள். வெள்ளை பக்க ஆட்டக்காரர் விளையாட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்; E5ல் இருக்கும் சிப்பாய் (Pawn), D6ல் இருக்கும் பிஷப்பையோ அல்லது F6ல் இருக்கும் குதிரையையோ வெட்டலாம். (எப்படி e5, d6, f6ன்னு குழப்பமா இருந்ததுன்னா, ஒரு தடவை பாகம் 1ஐ படிச்சுக்குங்க). குதிரையை சிப்பாய் வெட்டறார்னு வச்சிப்போம், அதை e5 x f6 என்று எழுதணும். படம் 1ல், வெட்டும் காய் சிப்பாய் என்பதால் அதற்க்கு ஒற்றெழுத்து குறியீடு கிடையாது. e5 x f6என்பதை இன்னும் சுருக்கி e x f6 என்று எழுதினாலே போதுமானது.
Read the rest of this entry »
Share This
Posted in Chess, Basics, Tutors | 14 Comments »
May 31st, 2007

அது என்னது ரவுண்ட் 1, கேம் 2ன்னு குழப்பமா இருக்கா? இந்த டோர்னமெண்ட் ஃபார்மட் அந்த மாதிரி! கீழே இதை விளக்கும் விதமாக ஒரு படம் போட்டிருக்கேன், பாருங்க.

Read the rest of this entry »
Share This
Posted in Chess, Tournaments | No Comments »
May 28th, 2007

White to play.
Puzzle 22 விடை:

இந்த பொசிஷன்ல வொயிட்டின் டார்க் பிஷப் h8டை பாயிண்ட் பண்ணிண்டுருக்கு, கவனிச்சீங்களா? அதுதான் இந்த டேக்டிக்ஸின் மெயின் பாயிண்ட். so, இப்போ வொயிட்டின் aim அதோட knightடை e7க்கு கொண்டு போறது. கொண்டு போயிட்டா ப்ளாக் மேட் ஆயிடும் (இல்லை, அதை தடுக்கறதுக்கு நிறைய மெட்டீரியல் lose பண்ணும்).
1.Nf5!
[ ப்ளாக் இப்போ க்வீனை கட் பண்ணறது தப்பு. 1…Rxd1? 2.Nxe7#, அதே மாதிரி இந்த knightடை கட் பண்ணவும் கூடாது, இல்லைன்னா மேட்தான். 1…gxf5? 2.Qg4+ fxg4 3.Rxg4+ Qg5 4.Rxg5# ]
1…Qg5 இந்த மூவ் e7 squareரை கண்ட்ரோல் பண்ணுது, அதே நேரம் க்வீனை ஒரு சேஃப் இடத்துக்கு கொண்டு போகுது.
2.Qc1! இந்த மூவ்தான் deflection tacticsக்கு ஒரு நல்ல example. ப்ளாக்கின் க்வீனை e7 ஸ்கொயர் protectionலருந்து நகர்த்தணும், so, white queen தன்னைய பலி கொடுக்க ரெடியாகுது.
2…e3 Of course, இங்கே வொயிட் க்வீனை எடுக்க கூடாது. எடுத்தா Ne7 mate.
3.Nh6+ Qxh6 4.Rxh6 Bf4 5.Rxg6+
[ இந்த இடத்துல வொயிட் தன்னோட ரூக்கை காப்பாத்திக்க நினைக்க கூடாது, இல்லைன்னா க்வீனே போயிடும். 5.Rh4? exf2+ 6.Kxf2 Bxc1]
5…hxg6 6.fxe3 Bh6 7.Qe1 +-
Share This
Posted in Chess, Puzzles | 7 Comments »
May 28th, 2007

இந்த டோர்னமெண்ட்டுக்கு எது வெப் சைட்டுன்னே தெரியலை, கொஞ்ச நேரம் தேடின பிறகு செஸ்நிஞ்சால கிடைச்சது, ஆனா அந்த சைட் வொர்க் ஆகலை. I think, கடைசி நேரத்துல அரக்கபரக்க பண்ணினா இந்த கதிதான்! ரொம்ப நேரம் அந்த சைட்டை refresh பண்ணி பார்த்தும் வொர்க் ஆகாததால், கேம் ஃபாலோ பண்ற இண்ட்ரெஸ்ட் போயிடுச்சு. ICC ஒரு ஃப்ரீ ஆடியோ கமெண்ட்டரி சர்வீஸ் தருது, அதே மாதிரி FICSல ஃப்ரீ ரிலே இருக்கலாம், ஆனா போங்கடான்னு நான் வேற வேலை பார்க்க போயிட்டேன்.

இன்னிக்கு கார்த்தால ரிசல்ட் பார்த்தா, ஆரோனியன் கார்ல்ஸனை தோக்கடிச்சிருந்தார், அதே மாதிரி க்ரிஷ்சக் ஜெயிச்சதும் எதிர்பார்த்ததுதான். கார்ல்ஸன் - ஆரோனியன் கேம் ஒரு ஸ்பானிஷ் ஒப்பனிங்.
Carlsen - Aronian (Candidates Matches 2007, Rd1 Game 1)
1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5 a6 4.Ba4 Nf6 5.0-0 Be7 6.d3 b5 7.Bb3 d6 8.a4 Rb8 9.axb5 axb5 10.Nc3 0-0 11.h3 Nb4 12.Ne2 c5 13.Ng3 Be6 14.Bxe6 fxe6 15.c3 Nc6 16.Re1 Qd7 17.d4 exd4 18.cxd4 c4 19.Bg5 h6 20.d5 exd5 21.Bxf6 Bxf6 22.Qxd5+ Rf7 23.Qd2 Ne5 24.Nxe5 Bxe5 25.Ne2 Rbf8 26.Rf1

இந்த பொசிஷன்ல ஆரோனியன் Rf3 விளையாண்டார், more of a pretty one than anything!
26…Rf3!?
ரொம்ப ஷாக்காகி போன கார்ல்ஸன் ஒரு sub optimal continuation விளையாண்டார்.
Read the rest of this entry »
Share This
Posted in Chess, Tournaments | 3 Comments »