Offtopic: தமிழ்மணம் toolbar problems

என்னால முடியலைய்யா, என்னால முடியலை! நானும் என்னோட பதிவை இந்த புது தமிழ்மணத்தில இணைச்சிடணும்னு மூணு நாளா ட்ரை பண்ணிண்டுருக்கேன்..ம்ஹூம்! “உன்னைய நான் சேர்த்துக்க மாட்டேன், போ”ன்னு அடம்பிடிக்குது தமிழ்மணம்!

Don’t take me wrong, என்னோட பதிவு உள்ள ரெஜிஸ்டர் ஆயிடுச்சு, ஆனா இந்த போஸ்ட்களை திரட்டும்போதுதான் எல்லா ப்ராப்ளமும்! நான் தமிழ்மணத்துல கொடுத்துருக்கிற instructions எல்லாத்தையும் செஞ்சேன், ஆனா தலைவர் எனக்கு வொர்க் பண்ண மாட்டேன்னுட்டார். சரி, நம்ப ஏதோ தப்பா பண்ணிட்டோம்னு டபுள் செக், ட்ரிபிள் செக்லாம் பண்ணி, எதுவும் வேலைக்காகததால் Thamizmanam Google groups-ல் ஒரு கேள்வியையும் போட்டேன். இன்னும் அதுக்கும் எதுவும் பதில் வரலை :-(

அதுக்குள்ள, மத்த Wordpress உபயோகிக்கறவங்களுக்கு எப்படி இது வேலை செய்யுதுன்னு பார்ப்போம்னு நம்ப கீதா சதீஷ், S.K இவங்க பதிவெல்லாம் போய் அவங்க source பார்த்தேன். அவங்களோடது மாதிரிதான் நானும் கோட் சேர்த்திருக்கேன். ஆனா, ஒண்ணும் பப்பு வேகலை!

கொஞ்சம் பார்த்து என்ன ப்ரச்சினைன்னு யாராவது சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!

[tags]Wordpress, Thamizmanam[/tags]

One Response to “Offtopic: தமிழ்மணம் toolbar problems”

  1. kannanmr Says:

    ஆஹா, பட்டை திடீர்னு தெரியுது, எப்படிங்க இது? ஒரு வேளை ஏற்கனவே தமிழ்மணம் திரட்டாத posts-ல மட்டும்தான் தெரியுமோ?!

Leave a Reply