அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு சின்ன அறிமுகம் [Part 1]
செஸ்சுக்கும் மற்ற ஆட்டங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. டெண்டுல்கர் லீ பந்தை சிக்ஸர் அடித்தார் என்றால் அதை நம்மால் டிவியில் பார்த்து ரசிக்க மட்டுமே முடியும். ஒரு பேட்டும் பாலும் நம்மிடம் இருந்தாலும் நம்மால் டெண்டுல்க்கரின் அந்த சிக்ஸரை திரும்பி அடித்து பார்க்க முடியாது. ஆனால் செஸ்ஸில் க்ராம்னிக்கும் லீகோவும் சென்ற வாரம் விளையாடியதை நம்மால் விளையாடியே பார்க்க முடியும். சென்ற வாரம் நடந்தது மட்டும் இல்லை, 100 வருடத்திற்கு முன்னால் யாரோ விளையாடிய ஒரு ஆட்டத்தை கூட நாம் இன்று விளையாடிப்பார்க்க முடியும். “அதெப்படி”னு யோசிக்கறீங்களா? அங்கேதான் இந்த செஸ் குறியீடு உபயோகமாகுது.இதை பற்றி பார்ப்பதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை ஒரு முறை பார்த்திடுவோம்.

[படம் 1]
மேலே இருக்கிற போர்ட் படத்தை (படம் 1) பாருங்க. இதுதான் ஆட்டத்தின் ஆரம்ப பொசிஷன். வெள்ளை கட்டம் (படம் 1ல் வட்டத்துக்குள் இருப்பது) வலது பக்கம் இருக்குமாறு போர்ட் இருக்க வேண்டும். எப்படி காய்களை அடுக்க வேண்டும் என்பதையும் இப்படம் காண்பிக்கிறது.

[படம் 2]
படம் 2ல் குறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காலம்ன் (column)னும் A முதல் H வரை பெயர் கொண்டு அழைக்கப்படும். செஸ்ஸில் காலம்ன் (column) என்பதை பைல் (file) என்று சொல்வார்கள். படம் 1ல் இருக்கும் காய்கள் படம் 2ல் எங்கெங்கு வைக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்

[படம் 3]
இப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரோ (row) ஒவ்வொன்றையும் ரேங்க் (rank) என்று சொல்வார்கள். ரேங்க்குகளை 1ல் ஆரம்பித்து 8 வரை பெயரிட்டு அழைப்பர். படம் 1ல் வெள்ளை காய்கள் முதல் இரண்டு ரேங்க்குகளிலும் கறுப்புக் காய்கள் கடைசி இரண்டு ரேங்க்குகளிலும் இருப்பதை கவனியுங்கள்.
ரேங்க்குகள் மற்றும் பைல்களை கொண்டு போர்ட்டில் எந்தவொரு கட்டத்தின் பெயரையும் கண்டுக்கொள்ளலாம்.
கட்டங்களின் பெயர்கள்:

[படம் 4]
இப்படத்தில் பச்சை நிறக் கட்டத்திற்கு என்ன பெயர் வரும் என்று பார்ப்போம். அது E பைலிலும், 6வது ரேங்க்கிலும் இருப்பதால் இதை E6 என்று சொல்ல வேண்டும்.

[படம் 5]
இப்படத்தில் குறிக்கப்பட்டுள்ள மஞ்சள் கட்டங்கள் ஒரு லாங் டையாக்னலை சார்ந்தவை. A1ல் ஆரம்பித்து H8ல் முடிகிறது இந்த டையாக்னல். மற்றொரு லாங் டையாக்னல் H1ல் ஆரம்பித்து A8ல் முடிகிறது (இப்படத்தில் அது குறிப்பிடப்படவில்லை).
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எல்லா கட்டங்களின் பெயர்களையும் குறித்துள்ளேன். ரெஃபரன்சிற்கு உதவும்.

[படம் 6]
கட்டங்களின் பெயர்களை தெரிந்து கொண்டாயிற்று. இப்பொது ஒரு காயை நகர்த்தினால் அதை எவ்வாறு இந்த குறியீட்டை கொண்டு குறிப்பது என்று பார்ப்போம். கீழே கொடுத்துள்ள டேபிளை பாருங்கள். ஒவ்வொரு காய்க்கும் (piece) ஒற்றெழுத்து குறியீடு ஒன்று உள்ளது.
|
(King) |
K | Q | ||
| R | B | |||
| N | எதுவும் கிடையாது |

[படம் 7]
உதாரணத்திற்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள போர்ட்டில் Bishop c1ல் இருந்து d2 நகருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதனை Bc1-d2 என்று எழுத வேண்டும். “-” என்பதை ஆங்கில “to” என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளவேண்டும். Bc1-d2 என்பது
{Piece குறியீடு}{ஆரம்பக்கட்டம்}-{சென்றடையும் கட்டம்}
என்ற பாணியில் இருப்பதை கவனியுங்கள். ஆக, எந்தவொரு காய் நகர்த்தலையும், மேலே கொடுத்திருக்கும் டெம்ப்ளேட்டினை (template) உபயோகப்படுத்தி எழுதிவிடலாம். சிப்பாய்க்கு (pawn) எந்தவொரு குறியீடும் தேவையில்லை.
இன்னும் சில உதாரணங்களை கீழே கொடுத்திருக்கேன். முதல்ல போர்ட் பொசிஷனை பார்த்து நீங்களாவே அதுக்கு என்ன சரியான குறியீடுன்னு யோசிச்சுக்கங்க. கீழே இருக்கும் விடையோட அது ஒத்து போகுதான்னு அப்புறமா பாருங்க. கீழே உள்ள படங்களில், காய் சென்றடைய வேண்டிய கட்டத்தை மஞ்சள் அம்பு சுட்டி காட்டுது.
![]() |
![]() |
| 1 | 2 |
![]() |
![]() |
விடைகள்:
- Rf8-d8 அல்லது Rd8
- Bf4-d2 அல்லது Bd2
- Kg8-f7 அல்லது Kf7
- Bf8-b4 அல்லது Bb4
இது வரையில் நாம் காய் நகர்த்தலை எப்படி அல்ஜீப்ரைக் குறியீட்டில் எழுதுவதுன்னு பார்த்தோம். இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது.
- காய் வெட்டுதல்
- கேஸ்ட்லிங் (ஷார்ட் மற்றும் லாங்)
- இராஜாவுக்கு செக் வைப்பது
- சிப்பாய் கடைசி ரேங்கினை சென்றடைந்து மற்றொரு காயாக மாறுவது
- மற்ற ஆட்டக் குறியீடுகள்
போன்றவனவற்றை எப்படி குறிப்பது என்று இதன் தொடர்ச்சியில் சொல்கிறேன
Note: இது ஒரு repost.




May 7th, 2007 at 3:36 pm
Super boss
Thanks
rock
———————————
start your own website 1Domain and 1 GB hosting just Rs1500/-
visit http://space2inet.com
———————————
May 7th, 2007 at 4:08 pm
Thanks Rock.
May 8th, 2007 at 3:05 am
கண்ணன்,
எனக்கு மிகவும் பிடித்தமான இந்த விளையாட்டு பற்றி எனக்குத் தெரிந்தவற்றைத் தங்களுக்கு எழுதி அனுப்பலாமா ?
May 8th, 2007 at 7:11 am
Great infos.Good for begineers.
May 8th, 2007 at 8:13 am
Thanks vaduvurkumar.
Latha, நிச்சயம் அனுப்புங்க. Also, please check this link - http://chathurangam.jumbledtho.....eo-tutors/
May 8th, 2007 at 8:31 am
பயனுள்ள முயற்சி. சதுரங்கம் குறித்த உயர் நிலை விளக்கங்களையும் தருவீர்கள்தேனே, ஆவலுடன் காத்திருப்போம்.
அன்புடன்,
மா சிவகுமார்
June 1st, 2007 at 11:37 am
i love chess very mutch but no people will not ready 2 tell how 2 play this wonder ful game.u only person tell about and increase my chess intrest.u mail my e-mail id wat r the steps 2 defeat another player.u done this 1 day i will became the chess grandmaster.kindly soon publish the next part.
thank u
have a nice day.
June 1st, 2007 at 11:40 am
thanke u very mutch
June 1st, 2007 at 11:41 am
thanke u
it s very useful for me
June 1st, 2007 at 11:44 am
thank u very much
it s very use ful
June 1st, 2007 at 12:26 pm
Thanks Abiuth/Swetha/Sivagami.
June 1st, 2007 at 3:36 pm
[…] பாகம் 1ல் நாம் கட்டங்களின் பெயர்களை பற்றியும், காய் நகர்த்தலை எப்படி குறிப்பது என்றும் பார்த்தோம். இந்த பாகத்தில் நாம் கீழே இருப்பவைகளை எப்படி குறிப்பது என்று பார்ப்போம். […]