கேண்டிடேட்ஸ் மேட்சஸ் - கேம் 1, ரவுண்ட் 1

Thanks Chessbase

இந்த டோர்னமெண்ட்டுக்கு எது வெப் சைட்டுன்னே தெரியலை, கொஞ்ச நேரம் தேடின பிறகு செஸ்நிஞ்சால கிடைச்சது, ஆனா அந்த சைட் வொர்க் ஆகலை. I think, கடைசி நேரத்துல அரக்கபரக்க பண்ணினா இந்த கதிதான்! ரொம்ப நேரம் அந்த சைட்டை refresh பண்ணி பார்த்தும் வொர்க் ஆகாததால், கேம் ஃபாலோ பண்ற இண்ட்ரெஸ்ட் போயிடுச்சு. ICC ஒரு ஃப்ரீ ஆடியோ கமெண்ட்டரி சர்வீஸ் தருது, அதே மாதிரி FICSல ஃப்ரீ ரிலே இருக்கலாம், ஆனா போங்கடான்னு நான் வேற வேலை பார்க்க போயிட்டேன்.

Game 1, Rd 1

இன்னிக்கு கார்த்தால ரிசல்ட் பார்த்தா, ஆரோனியன் கார்ல்ஸனை தோக்கடிச்சிருந்தார், அதே மாதிரி க்ரிஷ்சக் ஜெயிச்சதும் எதிர்பார்த்ததுதான். கார்ல்ஸன் - ஆரோனியன் கேம் ஒரு ஸ்பானிஷ் ஒப்பனிங்.

Carlsen - Aronian (Candidates Matches 2007, Rd1 Game 1)

1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5 a6 4.Ba4 Nf6 5.0-0 Be7 6.d3 b5 7.Bb3 d6 8.a4 Rb8 9.axb5 axb5 10.Nc3 0-0 11.h3 Nb4 12.Ne2 c5 13.Ng3 Be6 14.Bxe6 fxe6 15.c3 Nc6 16.Re1 Qd7 17.d4 exd4 18.cxd4 c4 19.Bg5 h6 20.d5 exd5 21.Bxf6 Bxf6 22.Qxd5+ Rf7 23.Qd2 Ne5 24.Nxe5 Bxe5 25.Ne2 Rbf8 26.Rf1

Carlsen - Aronian (Rd1 Gm1, Elista 07 Candidates Matches)

இந்த பொசிஷன்ல ஆரோனியன் Rf3 விளையாண்டார், more of a pretty one than anything!

26…Rf3!?

ரொம்ப ஷாக்காகி போன கார்ல்ஸன் ஒரு sub optimal continuation விளையாண்டார்.

27.Ra3?!

[இதுக்கு பதிலா அவர் 27.Qd5+ Kh7 28.Rad1 ட்ரை பண்ணிருக்கலாம், அதாவது அந்த ரூக்கை டோட்டலா இக்னோர் பண்ணிட்டு அவர் விளையாடிருக்கணும். Suppose, அவர் அந்த ரூக்கை எடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்?

27.gxf3 Rxf3 28.Nf4

( இந்த இடத்துல Ng3 விளையாடக்கூடாது. 28.Ng3 Qxh3 29.Qe2 Bxg3 30.fxg3 Rxg3+ 31.Kf2 Rg2+ 32.Ke1 Rxe2+ 33.Kxe2 Qg2+ 34.Ke3 ( 34.Rf2 ஒரு ரூக்கை விட வச்சிடும் 34…Qxe4+ 35.Kd2 ( 35.Kf1? Qh1+ 36.Ke2 Qxa1) 35…Qd4+ 36.Ke1 ( 36.Kc1?) 36…c3 இந்த மூவ் basicகா வொயிட்டோட ரூக்கை fork பண்ணுவதற்காக. )

28…Bxf4 29.Qd5+ Kh7 30.Qf5+ Qxf5 31.exf5 Rxh3 32.Kg2 ( 32.Rfd1 Be5) 32…Rh5;]

27…Rxa3 28.bxa3 Qc6 29.Nd4?! [ 29.Qe3] 29…Bxd4 30.Qxd4 Ra8 31.Ra1 c3 32.Qb4 Qc5 33.Qb3+ Kh8 34.Ra2 Ra4 35.Re2 Rxa3 36.Qd1 Ra8 white resigned 0-1

தேங்ஸ் செஸ்பேஸ்

க்ரிஷ்சக் malakhovவை போட்டு கஷ்டப்படுத்திட்டாருன்னுதான் சொல்லணும், அவங்க கேம்ல. Malakhovவோட ப்ரிப்பரேஷன் வீக்கா, இல்லை மனுஷன் டென்ஷனா விளையாண்டாரான்னு தெரியலை, ஆனா ஷ்யூரா இந்த கேம் க்ரிஷ்சக்குக்கு அல்வா சாப்பிடற மாதிரி இருந்திருக்கும். அடி பின்னிட்டார்! முழு கேம்லயும் ப்ளாக் ஒண்ணுமே பண்ணலைன்னுதான் சொல்லணும், அதுவும் 27வது மூவ்வுக்கு அப்புறம் விளையாடி பாருங்க, ஒரே காமெடி!!

ஜூடித் - பரீவ்ல ஜூடித் ஒரு பெரிய எஸ்கேப், ரொம்ப கஷ்டப்பட்டுதான் ட்ரா பண்ணினாங்க, பரீவ் தேவையில்லாம அவங்களை தப்பிக்க விட்டுட்டார். இதே மாதிரி Gelfand - Kasimdzhanovல, Black ரொம்ப கஷ்டப்பட்டுதான் ட்ரா பண்ணினது. ஆடம்ஸ் - ஷிரோவ்ல, ஆடம்ஸ் ஜெயிச்சிருக்கணும்னுதான் எனக்கு தோணுது, எங்க மிஸ் பண்ணினார்ன்னு தெரியலை. எப்படியோ ஷிரோவ்க்கு ஒரு அரை பாயிண்ட் வந்திடுச்சு. மீதி கேம்ஸ்லாமும் ரொம்ப uneventful drawsதான்.

BTW, ஒரு இண்ட்ரெஸ்டிங் டீடெயில் என்னன்னா நமப GM S.S.Gangulyதான் ஷிரோவ்க்கு செகண்ட், கீழ ஃபோட்டோவை பாருங்க.

Thanks FIDE

இந்த டோர்னமெண்ட் ரூல்ஸ் பார்க்க இங்கே க்ளிக்குங்கள். இந்த ரவுண்டின் எல்லா கேம்களும் இங்கே பார்க்கலாம், சூசன் பால்கர் (ஜுடித் பால்கரின் அக்கா!) ஜூடித்தின் கேம்மை கொஞ்சம் போல அனலைஸ் பண்ணி இங்கே போட்டிருக்காங்க. FIDE சைட்ல நிறைய ஃபோட்டோஸ் இருக்கு (page1 , page2, page3), மிஸ் பண்ணிட்டாதீங்க.

3 Responses to “கேண்டிடேட்ஸ் மேட்சஸ் - கேம் 1, ரவுண்ட் 1”

  1. jaisankar Says:

    அன்புள்ள ணன்பா
    I KNOW CHESS. BUT I WANT TO IMPROVE MY KNOWLEDGE . WHICH BOOK I CAN FOLLOW(I DONOT KNOW ABOUT BOOKS.
    REGARDS,
    JAISANKARJ

  2. jaisankar Says:

    SEND MAILS TO MY EMAIL
    jaisankarj@yahoo.com

  3. jaisankarj Says:

    என்ன னன்பா

    reply பன்ன மாட்டியா

Leave a Reply


Close
E-mail It