கேண்டிடேட்ஸ் மேட்சஸ் - கேம் 2 & 3 (ரவுண்ட் 1)

அது என்னது ரவுண்ட் 1, கேம் 2ன்னு குழப்பமா இருக்கா? இந்த டோர்னமெண்ட் ஃபார்மட் அந்த மாதிரி! கீழே இதை விளக்கும் விதமாக ஒரு படம் போட்டிருக்கேன், பாருங்க.

விளையாடற 16 பேரையும் நாலு நாலா பிரிச்சு 4 க்ரூப் ஃபார்ம் பண்ணிருக்காங்க. உதாரணத்துக்கு கார்ல்ஸன்/ஆரோனியன்/ஷிரோவ்/ஆடம்ஸ் ஒரு க்ரூப். இதுல கார்ல்ஸன் - ஆரோனியன், ஆடம்ஸ் - ஷிரோவ் மொத்தம் ஆறு கேம் விளையாடுவாங்க, இதான் ரவுண்ட் 1. இதுல வின் பண்ணுறவங்க ரவுண்ட் 2க்கு போவாங்க. ரவுண்ட் 2ல வின் பண்ணுற நாலு பேரு வேர்ல்ட் கப் டோர்னமெண்ட்டுக்கு மெக்ஸிக்கோ போவாங்க.
நான் ஒண்ணு பண்ணுறேன், ஒவ்வொரு ரவுண்ட் முடிவிலயும் இந்த படத்தை அப்டேட் பண்ணி போடறேன், நமக்கு இந்த டோர்னமெண்ட்டை ஃபாலோ பண்ண இது வசதியா இருக்கும். சரி, கேம்முக்கு போவோம்.
கேம் 2ல பக்ராட் காம்ஸ்கிக்கிட்ட டைம் ட்ரபிள்ல தோத்து போனார், ஒழுங்கா டைம்ல விளையாடிருந்தா ட்ராவாது பண்ணிருக்கலாம். லீகோ குரவிச்சை ரொம்ப ஈசியா வின் பண்ணின மாதிரி இருந்தது. லீகோ டோட்டலா குரவிச்சை அவுட்க்ளாஸ் பண்ணறார்னுதான் எனக்கு தோணுது. என்னத்தான் குரவிச் ஒரு காலத்துல சூப்பர் ப்ளேயரா இருந்திருந்தாலும், இங்கே லீகோவோட கம்பேர் பண்ணும்போது ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. இந்த எண்ட்கேம் விளையாடி பார்க்கணும், லீகோ என்னமோ ரொம்ப ஈசியா வின் பண்ணின மாதிரி இருந்தாலும் நிச்சயம் இது ரொம்ப tricky oneதான். கேம் 1ல எஸ்கேப் ஆன போல்கர், இந்த கேம்ல பரீவ்கிட்ட மாட்டிக்கிட்டாங்க. பரீவ் கரெக்ட்டா விளையாடி முழு பாயிண்ட்டையும் எடுத்துண்டார், ஆனா சொல்ல முடியாதுங்க, இந்த ஜூடித் நடுவுல கொஞ்ச நாளா விளையாடாம இருந்தாலும் அநியாயத்துக்கு டேலண்ட்டட் ஆளு. So, மீதி கேம்ல பயங்கர அக்ரஸிவா விளையாட சான்ஸ் இருக்கு. ஆனா பரீவும் பயங்கர experienced ஆளு (எவ்வளவு வருஷமா டாப் 10ல இருந்தாருன்னு எடுத்து பார்த்தீங்கன்னா தெரியும்), எது வேணுமனாலும் நடக்க்லாம். மலகோவ்வும் என்னன்னமோ பண்ணி பார்த்தாரு, ஆனா க்ரிஷ்சக்கிட்ட இருந்து அரை பாயிண்டுக்கு மேலே கிடைக்கலை. அதே மாதிரி கஸிம்ஜனோவ் - கெல்ஃபாண்ட்டும் ட்ரா. கார்ல்ஸன் முந்தின கேம்ல தோத்து போயிருந்தாலும், இந்த கேம்ல ஆரோனியனுக்கு எதிரா Benko/Volga gambit விளையாடினார், தில்லுதான். ஆனா ஆரோனியன்னால ட்ரா தவிர எதுவும் பண்ண முடியலைன்றது வேற விஷயம். மீதி கேம்லாமும் ட்ராதான். ஆக, இந்த கேம் முடிவுல காம்ஸ்கி, க்ரிஷ்சக், ஆரோனியன், லீகோ 1.5 பாயிண்ட்ஸ்ல இருக்காங்க.

கேம் 3 இன்னும் இண்ட்ரெஸ்டிங். திருப்பி லீகோ குரவிச்சையும், காம்ஸ்கி பக்ராட்டையும் தோக்கடிச்சாங்க. காம்ஸ்கி-பக்ராட் திரும்பி டைம் ட்ரபிளோட விளையாடின கேம். இரண்டு பேருக்குமே டைமுக்குள்ள விளையாடறது கஷ்டமாத்தான் இருக்கு. மேட்ச்சோட ஹைலைட் கார்ல்ஸன் ஆரோனியனை தோக்கடிச்சதுதான். நல்லா பார்த்துக்கங்க, இந்த பொடி பையன் என்னிக்காவது ஒரு நாள் வேர்ல்ட் சாம்பியன் நிச்சயம் ஆவார்! ஒரு நல்ல எண்ட்கேம்முக்கு அவரோட இங்லீஸ் ஒப்பனிங்கை கொண்டு போனார், கார்ல்ஸன். நிஜமாவே இண்ட்ரெஸ்டிங் கேம்! பொனமரியோவ் ஒரு நல்ல பொசிஷன்ல இருந்தார், ஆனா ஒவரா ரூப்ளவ்ஸ்கியை புஷ் பண்ண போய் (49.Qb6?!) தேவையில்லாம முழு பாயிண்டையும் விட்டார். ஜூடித் - பரீவ் ட்ரா. ஜூடித்துக்கு என்ன்ன்னு தெரியலை, இன்னும் ஃபுல் ஃபார்ம் வரலை, அதே மாதிரி அவங்க ஓப்பனிங்லாம் கொஞ்சம் வீக்காத்தான் இருக்கு. ஷிரோவ் - ஆடம்ஸ்சும் ட்ரா. ஷிரோவ்க்கு வயசாயிடுச்சுன்னு (?!) எனக்கு தெரியும், ஆனா இந்த ஆடம்ஸுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை!! இவங்க ரவுண்ட்ல ஈசியா ஆடம்ஸ் வின் பண்ணிடுவார்னு நான் எதிர்பார்த்தேன். மீதி கேம்லாம் ட்ரா.
ஆக, லீகோவும் காம்ஸ்கியும் 2.5 - 0.5ல இருக்காங்க. இன்னும் ஒரு கேம் ஜெயிச்சா ரவுண்ட் 1 ஜெயிச்சிருவாங்க! பாவம், குரவிச்சுக்கும் பக்ராட்டுக்கும்தான் ஏகத்துக்கு ப்ரஷர்.
டோர்னமெண்ட் சைட்ல இது வரைக்கும் நடந்த கேம்ல்லாம் அனலை பண்ணி போட்டிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு (analysed by GM Scherbakov)