அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு சின்ன அறிமுகம் [Part 2]

பாகம் 1ல் நாம் கட்டங்களின் பெயர்களை பற்றியும், காய் நகர்த்தலை எப்படி குறிப்பது என்றும் பார்த்தோம். இந்த பாகத்தில் நாம் கீழே இருப்பவைகளை எப்படி குறிப்பது என்று பார்ப்போம்.

  1. வெட்டுதல்
  2. கேஸ்ட்லிங் (ஷார்ட் மற்றும் லாங்)
  3. இராஜாவுக்கு செக் வைத்தல்.
  4. சிப்பாய் கடைசி ரேங்கினை சென்றடைந்து மற்றொரு காயாக மாறுவது
  5. மற்ற ஆட்டக் குறியீடுகள்

முதல்ல காய் வெட்டுதலை குறிப்பதற்கு ஒரு டெம்ப்ளேட் ரெடி பண்ணுவோம். “X” என்பது வெட்டுவதை குறிக்கும்.

{Piece குறியீடு}{இருக்கும் இடம்} X {வெட்டப்பட்ட காய் இருக்கும் கட்டம்}

இப்பொ இந்த டெம்ப்ளேட்டை எப்படி உபயோகப்படுத்தறதுன்னு பார்ப்போம்.

படம் 1

[படம் 1]

படம் 1ஐ பாருங்கள். வெள்ளை பக்க ஆட்டக்காரர் விளையாட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்; E5ல் இருக்கும் சிப்பாய் (Pawn), D6ல் இருக்கும் பிஷப்பையோ அல்லது F6ல் இருக்கும் குதிரையையோ வெட்டலாம். (எப்படி e5, d6, f6ன்னு குழப்பமா இருந்ததுன்னா, ஒரு தடவை பாகம் 1ஐ படிச்சுக்குங்க). குதிரையை சிப்பாய் வெட்டறார்னு வச்சிப்போம், அதை e5 x f6 என்று எழுதணும். படம் 1ல், வெட்டும் காய் சிப்பாய் என்பதால் அதற்க்கு ஒற்றெழுத்து குறியீடு கிடையாது. e5 x f6என்பதை இன்னும் சுருக்கி e x f6 என்று எழுதினாலே போதுமானது.

மேலே இருக்கும் டெம்ப்ளேட்டினை இங்கு பொருத்தி பார்போம். சிப்பாய்க்கு Piece குறியீடு எதுவும் தேவையில்லை. சிப்பாயின் இருக்கும் இடம் “E5″.அது வெட்டும் காய்(குதிரை) இருக்கும் இடம் f6.”x” என்பது வெட்டுவதை குறிக்கும்.

படம் 2

[படம் 2]

இங்கும் வெள்ளை ஆட்டக்காரர்தான் ஆட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். வெள்ளை பிஷப் கறுப்பு பிஷப்பை வெட்டுவதுதான் சரியான மூவாக தெரிகிறது இல்லையா? அதை எப்படி குறிப்பது என்று பார்ப்போம்.

  • வெள்ளை பிஷப் இருக்கும் இடம் : c4
  • கறுப்பு பிஷப் இருக்கும் இடம் : e6
  • பிஷப்பின் குறியீடு : B

ஆக, Bc4 x f6 அல்லது Bxf6 என்று இதனை எழுத வேண்டும்.

சரி, இப்போ கீழே இருக்கிறவைகளை எப்படி குறிப்பதுன்னு கண்டுப்பிடிங்க. விடைகளை கீழே கொடுத்திருக்கேன்.

1 2
3 4

விடைகள்:

  1. Bxc3 (அ) Bb4 x c3
  2. Nxh6 (அ) Nf5 x h6
  3. Bxf5 (அ) Bh3 x f5
  4. hxg4 (அ) h3 x g4

இப்போ கேஸ்ட்லிங்கை எப்படி குறிப்பதுன்னு பார்ப்போம். கேஸ்ட்லிங்கில் இரண்டு வகை இருக்கிறது. லாங் (Long) அல்லது ஷார்ட் (Short).

ஷார்ட் கேஸ்ட்லிங் (O-O)

படம் 3

இந்த படத்தில் கிங் g1க்கும் ரூக் a1க்கும் நகருவதுதான் ஷார்ட் கேஸ்ட்லிங். இதை O-O என்று எழுத வேண்டும். கறுப்பு கிங்e8ல் இருந்து g8க்கும், கறுப்பு ரூக்h8ல் இருந்து f8க்கும் ஷார்ட் கேஸ்ட்லிங்கில் நகரும்

லாங் கேஸ்ட்லிங் (O-O-O)

படம் 4

இந்த படத்தில் கிங் c1க்கும் ரூக் d1க்கும் நகருவதுதான் லாங் கேஸ்ட்லிங். இதை O-O-O என்று எழுத வேண்டும். கறுப்பு கிங் e8ல் இருந்து c8க்கும், கறுப்பு ரூக் a8ல் இருந்து d8க்கும் லாங் கேஸ்ட்லிங்கில் நகரும்.

கிங்குக்கு செக் வைப்பதை குறிப்பது ரொம்ப சுலபம். கீழே கொடுத்திருக்கும் டெம்ப்ளேட்டில் ஒன்றினை உபயோகிக்கலாம்.

  • {Piece குறியீடு}{சென்றடையும் இடம்}+
  • {Piece குறியீடு}x{சென்றடையும் இடம்}+
  • {சென்றடையும் இடம்}={Piece குறியீடு}+

மூன்றாவதாக இருக்கும் டெம்ப்ளேட்டினை எங்கு உபயோகிப்பதுன்னு பிறகு சொல்கிறேன். அதுக்கு முன்னாடி சில உதாரணங்களை பார்ப்போம்.

படம் 5

[படம் 5]

இந்த படத்தில் கொடுத்திருக்கும் பொசிஷனில், கறுப்பு ரூக் வெள்ளை பிஷப்பை வெட்டி இராஜாவுக்கு செக் வைக்கலாம். அதை

R x h3 +

என்று எழுதவேண்டும். எப்படி இரண்டு விஷயங்கள் (பிஷப்பை வெட்டுவதையும், இராஜாவுக்கு செக் வைப்பதையும்) சேர்த்து எழுதறோம் என்பதை கவனியுங்கள்.

கீழே மேலும் சில பொசிஷன்கள் தந்துள்ளேன். விடைகள் அதற்கு கீழே உள்ளன.

5 6
7 8

விடைகள்:

  1. g4+ (அ) g5-g4+
  2. Qxd2+ (அ) Qf4 x d2+
  3. Nf6+ (அ) Ng4-f6+
  4. Ng6-e5+. இதை Ne5+ என்று எழுதக்கூடாது. ஏனென்றால், e5 கட்டத்திற்க்கு c4ல் இருக்கும் குதிரையும் வர முடியும். அதனால், எந்த காய் e5கட்டத்திற்க்கு வருகிறது என்று சொல்லுதல் அவசியம்.

ஒரு சிப்பாய் எதிரி பிரதேசத்தில் கடைசி ரேங்கை சென்றடைந்தால், அது மற்றொறு காயாக மாற வேண்டும் என்பது செஸ் பொது விதி. எப்போதும் இராணியாகத்தான் மாற வேண்டும் என்பது அவசியமில்லை. அதே போல் நான் சிப்பாயையே வைத்துக்கொள்வேன், வேறு காய் எதுவும் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றெல்லாம் அடம் பிடிக்க முடியாது.

இதனை குறிப்பது ரொம்பவும் சுலபம். கீழ் கண்ட டெம்ப்ளேட்டினை இதற்கு உபயோகிக்கலாம்.

{சென்றடையும் கட்டம்} = {புது காயின் குறியீடு}

இதற்கு ஒரு உதாரணமே போதுமானது.

படம் 6

இங்கு a7ல் இருக்கும் சிப்பாய் a8ற்கு சென்று இராணியாக மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம். இதனை,

a8=Q

என்று எழுத வேண்டும். கீழே இரண்டு பொசிஷன்கள் கொடுத்துள்ளேன். இவற்றை எப்படி எழுத வேண்டும் என்று கண்டு விடைகளோடு சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

9) சிப்பாய் குதிரையாக மாற வேண்டும் 10) சிப்பாய் இராணியாக மாறி இராஜாவுக்கு செக் தர வேண்டும்

விடைகள்:

  1. h8=N
  2. h8=Q+. செக் வைப்பதற்க்கான டெம்ப்ளேட்டுகளில் மூன்றாவது வகையை சார்ந்தது இது.

Whew! இன்னும் சில குறியீடுகள் மட்டும் பார்த்து விட்டோம் என்றால் சுபம் போட்டுடலாம்.

Annotation moves:

? தப்பான மூவ்
! நல்ல மூவ்.
!! ரொம்ம்ம்ம்ப நல்ல மூவ் (Brilliant move)
?? சொதப்பல் (Very bad move)
!? நல்ல ஐடியா. (Interesting move)
?! கொஞ்சம் சந்தேகம்தான். (Dubious move)
+- வெள்ளை கிட்டத்தட்ட ஜெயிச்சாச்சு. (White is winning)
-+ கறுப்பு கிட்டத்தட்ட ஜெயிச்சாச்சு. (Black is winning)
வெள்ளை நல்ல பொசிஷனில் இருக்கு
கறுப்பு நல்ல பொசிஷனில் இருக்கு
கறுப்புக்கு அட்வான்டேஜ்.
வெள்ளைக்கு அட்வான்டேஜ்.
1-0 வெள்ளை ஆட்டக்காரருக்கு ஒரு பாயிண்ட்.
0-1 கறுப்பு ஆட்டக்காரருக்கு ஒரு பாயிண்ட்.
ஆட்டம் ட்ரா.
# Mate.
++ Double Check

இந்த குறியீடுகள் ஆங்கில adjectiveகள் போன்றவை. இவைகளை உபயோகப்படுத்தி ஒரு மூவை பற்றி சொல்ல முடியும். உதாரணத்திற்கு, Bf4+?? என்பதில் இருக்கும் “??” குறியீடானது, பிஷப் f4க்கு சென்று செக் வைப்பது கேவலமான மூவ் என்று சொல்கிறது. “1-0“, “0-1” மற்றும் ” ” என்பவை ஆட்டம் எப்படி முடிஞ்சதுன்னு சொல்லுவதற்கு உபயோகமாகுது. இப்போ இது வரைக்கும் நாம் பார்த்தவைகளை உபயோகப்படுத்தி ஒரு முழு ஆட்டம் ஒன்றினை பார்ப்போம்.

1.e4 c5

{ முதல் பகுதி (e4) வெள்ளை காயினை குறிக்கிறது. இரண்டாம் பகுதி (c5) கறுப்பு மூவை குறிக்க. }

2.Nc3 Nc6 3.Bc4 Nf6 4.d3 Ne5N

{”N” என்பது இது ஒரு புது மூவ் என்பதை சொல்வதற்கு (Novelty).}

5.Nge2 e6 6.0–0 Nxc4 7.dxc4 a6 8.Ng3 Qc7 9.f4 g6? 10.e5+- Qc6?? 11.exf6 b5 12.cxb5 axb5 13.f5 Kd8 14.fxe6 Qxe6 15.Nxb5 Bb7 16.b3 c4 17.Bf4 Bc5+ 18.Kh1 cxb3 19.cxb3 d6 20.Bxd6 Bxd6 21.Nxd6 Bd5 22.Nc4 Kc7 23.Rc1 Kb8 24.Qd2 Ra6 25.Qb4+ Ka8 {White lost on time} 0–1

இதோட இந்த “அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு அறிமுகம்”ஐ முடிச்சுக்கறேன். ஏதாவது சந்தேகமோ, இல்லை நான் தவறா எதையாவது குறிப்பிட்டிருந்தாலோ இங்கே ஒரு பின்னூட்டம் போடுங்க; எனக்கு மெயில் அனுப்ப இங்கே க்ளிக்கவும்.

14 Responses to “அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு சின்ன அறிமுகம் [Part 2]”

  1. ABIUTH Says:

    hi it is very use ful for me .u kindly tell me more about chess for example like StrateMating patterns , Strategical motifs ,Combination themes , Tactics vs Strategy in my e-mail-id pls

  2. ABIUTH Says:

    pls fast replay

  3. abiuth Says:

    pls send any chess software.2 play chess games on my computer pls sir.

  4. kannanmr Says:

    Abiuth, try Winboard - http://www.tim-mann.org/xboard.html or Jose - http://jose-chess.sourceforge.net/

    Winboard comes with Crafty (a strong engine), while Jose will allow you to maintain a DB of your games.

  5. abiuth Says:

    sir i want 2 know what r the tactics 2 play chess games pls pls

  6. abiuth Says:

    thanks for sending this software but sir i dont no how 2 use this software

  7. abiuth Says:

    i dont no how 2 download this software

  8. swatha Says:

    thanks

  9. swatha Says:

    thanks

  10. Kannan Ramanathan Says:

    Abiuth, try http://forums.jumbledthoughts.com It has a list of software and more tutors.

    Swatha, thanks.

  11. swatha Says:

    sir pls send LEON CHESS games final 4 games bet.anand-topalov i want 2 see that game pls sir

    THANK U SIR

  12. priya Says:

    thank u sir its use ful for me

  13. jaisankarj Says:

    sir,
    i know chess. i want to improve game. which book i can follow.
    send mail to jaisankarj@yahoo.com
    regards,
    jaisankarj

  14. Jayne Roceo Says:

    Howdy, On Thursday I found information on crafty chess. Your post on அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு சின்ன அறிமுகம் [Part 2] really added to that, and I found myself nodding throughout your post!

Leave a Reply


Close
E-mail It