About
Hi, என் பெயர் கண்ணன் இராமநாதன். பிறந்தது மதுரை, வளர்ந்தது திருச்சி, வேலை பார்க்க ஆரம்பிச்சது சென்னைல, இப்போ பெங்களூரில் Intel-ன்னு ஒரு கம்பெனில குப்பை கொட்டிண்டுருக்கேன். கல்யாணம் ஆகி இப்போத்தான் ஒரு வருஷம் ஆயிருக்கு.
எனக்கு ஜெனரலா ஏகப்பட்ட விஷயங்களில் இண்ட்ரெஸ்ட், எதை பார்த்தாலும் “Wow, இதை நானும் செஞ்சு பார்க்கணும்” உடனே தோணும். அதே மாதிரி கொஞ்சம் நாள்ல வேற ஒரு இண்ட்ரெஸ்டிங் விஷயம் மாட்டினவுடனே இதை விட்டுட்டு அதை பண்ண ஆரம்பிச்சிடுவேன். ஆனா, ஒரு சில விஷயங்கள் எனக்கு எப்பவுமே இண்ட்ரெஸ்டிங்தான் - chess, movies, books & computers. இந்த கம்ப்யூட்டர்ல நான் செலவழிச்ச நேரத்துல நான் ஒரு 10% படிப்புல போட்டிருந்தாலும் நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருப்பேன்னு எங்கம்மா சொல்லுவாங்க, என்னமோ நான் படிப்புல அப்படியே சூரப்புலி மாதிரி!
இதை தவிர திடீர் திடீர்னு எனக்கு எதுலயாவது இண்ட்ரெஸ்ட் வரும், இப்போதைய இண்ட்ரெஸ்ட் பட்டியல் இங்கே.
எனக்கு செஸ்ல இண்ட்ரெஸ்ட் வந்தது 2001லதான். அது வரைக்கும் நானும் செஸ் விளையாட தெரியும்னு சொல்லிப்பனே தவிர, ஒண்ணும் ரொம்ப சீரியஸா ஃபாலோ அப் பண்ணினதெல்லாம் கிடையாது. என்னோட கஸின் ஒருத்தன் நல்ல செஸ் ப்ளேயர், அவன் பேரு கார்த்திக் ரங்கராஜன். சசிகிரணும் இவனும் ஒண்ணாத்தான் செஸ் கத்துண்டாங்க. இவனை பத்தி சின்ன வயசுல எங்க வீட்ல பேசி கேட்டிருக்கேன், அப்ப கூட எனக்கு கிரிக்கெட்டிலும், Badmintonலயும் இருந்த இண்ட்ரெஸ்ட் செஸ்ல வரலை. ஆனா, செஸ் பத்தி கொஞ்சம் புரிய ஆரம்பிச்ச பிறகு டோட்டலா எல்லாம் மாறினதுன்னுதான் சொல்லணும். செஸ்ல இருக்கிற அந்த ஒரு த்ரில், adrenaline rush, satisfaction எனக்கு என்னமோ வேற எதிலயுமே இல்லைன்னு தோண ஆரம்பிச்சது; basically, learning about chess opened up a new dimension for me!
இண்ட்ரெஸ்ட் இருக்கிற அளவு நேச்சுரலா நம்பளுக்கு டேலண்ட் கிடையாதுங்கறதை நான் ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சுண்டேன், சரி அதை கொஞ்சமாவது வளர்த்துக்கலாம்னு பார்த்தா, இருக்கிற டைம் எல்லாம் வேலைக்கும் என்னோட வீட்டு அம்மிணிக்குமே போயிடுது, நம்பளுக்கு ஒண்ணும் மிஞ்ச மாட்டேங்குது :-(. Anyway, one day, I hope to be an IM, at least. (I know it’s a long shot, but dreams are supposed to be big, right
)
என்னோட ஆங்கில வலைப்பதிவு படிக்க இங்கே க்ளிக்கவும்.
Other links:
- Use this form for contacting me
- Click here for my CV
- Check out my “About me” page in my other blog.