அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு சின்ன அறிமுகம் [Part 2]
Friday, June 1st, 2007பாகம் 1ல் நாம் கட்டங்களின் பெயர்களை பற்றியும், காய் நகர்த்தலை எப்படி குறிப்பது என்றும் பார்த்தோம். இந்த பாகத்தில் நாம் கீழே இருப்பவைகளை எப்படி குறிப்பது என்று பார்ப்போம்.
- வெட்டுதல்
- கேஸ்ட்லிங் (ஷார்ட் மற்றும் லாங்)
- இராஜாவுக்கு செக் வைத்தல்.
- சிப்பாய் கடைசி ரேங்கினை சென்றடைந்து மற்றொரு காயாக மாறுவது
- மற்ற ஆட்டக் குறியீடுகள்
முதல்ல காய் வெட்டுதலை குறிப்பதற்கு ஒரு டெம்ப்ளேட் ரெடி பண்ணுவோம். “X” என்பது வெட்டுவதை குறிக்கும்.
{Piece குறியீடு}{இருக்கும் இடம்} X {வெட்டப்பட்ட காய் இருக்கும் கட்டம்}
இப்பொ இந்த டெம்ப்ளேட்டை எப்படி உபயோகப்படுத்தறதுன்னு பார்ப்போம்.

[படம் 1]
படம் 1ஐ பாருங்கள். வெள்ளை பக்க ஆட்டக்காரர் விளையாட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்; E5ல் இருக்கும் சிப்பாய் (Pawn), D6ல் இருக்கும் பிஷப்பையோ அல்லது F6ல் இருக்கும் குதிரையையோ வெட்டலாம். (எப்படி e5, d6, f6ன்னு குழப்பமா இருந்ததுன்னா, ஒரு தடவை பாகம் 1ஐ படிச்சுக்குங்க). குதிரையை சிப்பாய் வெட்டறார்னு வச்சிப்போம், அதை e5 x f6 என்று எழுதணும். படம் 1ல், வெட்டும் காய் சிப்பாய் என்பதால் அதற்க்கு ஒற்றெழுத்து குறியீடு கிடையாது. e5 x f6என்பதை இன்னும் சுருக்கி e x f6 என்று எழுதினாலே போதுமானது.

