ஒரு சின்ன அப்டேட்
Thursday, June 28th, 2007செஸ் ஆர்வலர்களுக்கான ஒரு வலைத்தளம் பற்றி என்னோட முந்தின போஸ்டில் சொல்லிருந்தேன். அதை இன்னும் முழுசா, ஒழுங்கா பண்ணனும்னு நானும் என்னோட ஃப்ரண்ட் KCயும கொஞ்சம் பெரிய லெவல்ல யோசிச்சிட்டுருக்கோம். இதை பண்ணுறது நிச்சயம் அவ்வளவு சுலபமா இருக்க போறது இல்லை, அதுவும் ஆஃபீஸுக்கும் வீட்டுக்கும் போக மிஞ்சற நேரத்துல இதை பண்ணனும். இதுக்காக புதுசா Flash, Drupal பத்தியெல்லாம் என்னமோ எக்ஸாம்முக்கு படிக்கற மாதிரிதான் நாங்க படிச்சுண்டுருக்கோம் (அதாவது, புக்கை ஓப்பனே பண்ண மாட்டோம்னு அர்த்தம்!
)
இத்தனைக்கும் நடுவுல இந்த ப்ளாக்கை அப்டேட் செய்யறதுன்றது ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. அதுனால இந்த தளத்தோட ஃபோகஸ்சை மாத்திடலாம்னு பார்க்கறேன். இந்த ப்ளாக்குன்னு இனிமே ட்யூட்டரோ, ஒரு பெரிய ஆர்டிகிளோ எழுதப்போறது இல்லை. இந்த ப்ளாக்கை இனிமே முழுவதும் என்னோட personal chess improvementடை track பண்ணுறதுக்குன்னு யூஸ் பண்ண போறேன். அப்பப்ப சில டோர்னமெண்ட்களில் இருந்து ஒண்ணு இரண்டு ஆட்டங்களை இங்க பாயிண்ட் அவுட் பண்ணறதோட நிப்பாட்டிக்கலாம்னு இருக்கேன்.
BTW, Dortmund 2007 & Aerosvit டோர்னமெண்ட்கள் நடந்துண்டு இருக்கு. மறக்காம ஃபாலோ பண்ணுங்க.








