Archive for the ‘Tournaments’ Category

கேண்டிடேட்ஸ் மேட்சஸ் - கேம் 2 & 3 (ரவுண்ட் 1)

Thursday, May 31st, 2007

Thanks Chessbase.com

அது என்னது ரவுண்ட் 1, கேம் 2ன்னு குழப்பமா இருக்கா? இந்த டோர்னமெண்ட் ஃபார்மட் அந்த மாதிரி! கீழே இதை விளக்கும் விதமாக ஒரு படம் போட்டிருக்கேன், பாருங்க.

Candidates matches - Play off table

(more…)

கேண்டிடேட்ஸ் மேட்சஸ் - கேம் 1, ரவுண்ட் 1

Monday, May 28th, 2007

Thanks Chessbase

இந்த டோர்னமெண்ட்டுக்கு எது வெப் சைட்டுன்னே தெரியலை, கொஞ்ச நேரம் தேடின பிறகு செஸ்நிஞ்சால கிடைச்சது, ஆனா அந்த சைட் வொர்க் ஆகலை. I think, கடைசி நேரத்துல அரக்கபரக்க பண்ணினா இந்த கதிதான்! ரொம்ப நேரம் அந்த சைட்டை refresh பண்ணி பார்த்தும் வொர்க் ஆகாததால், கேம் ஃபாலோ பண்ற இண்ட்ரெஸ்ட் போயிடுச்சு. ICC ஒரு ஃப்ரீ ஆடியோ கமெண்ட்டரி சர்வீஸ் தருது, அதே மாதிரி FICSல ஃப்ரீ ரிலே இருக்கலாம், ஆனா போங்கடான்னு நான் வேற வேலை பார்க்க போயிட்டேன்.

Game 1, Rd 1

இன்னிக்கு கார்த்தால ரிசல்ட் பார்த்தா, ஆரோனியன் கார்ல்ஸனை தோக்கடிச்சிருந்தார், அதே மாதிரி க்ரிஷ்சக் ஜெயிச்சதும் எதிர்பார்த்ததுதான். கார்ல்ஸன் - ஆரோனியன் கேம் ஒரு ஸ்பானிஷ் ஒப்பனிங்.

Carlsen - Aronian (Candidates Matches 2007, Rd1 Game 1)

1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5 a6 4.Ba4 Nf6 5.0-0 Be7 6.d3 b5 7.Bb3 d6 8.a4 Rb8 9.axb5 axb5 10.Nc3 0-0 11.h3 Nb4 12.Ne2 c5 13.Ng3 Be6 14.Bxe6 fxe6 15.c3 Nc6 16.Re1 Qd7 17.d4 exd4 18.cxd4 c4 19.Bg5 h6 20.d5 exd5 21.Bxf6 Bxf6 22.Qxd5+ Rf7 23.Qd2 Ne5 24.Nxe5 Bxe5 25.Ne2 Rbf8 26.Rf1

Carlsen - Aronian (Rd1 Gm1, Elista 07 Candidates Matches)

இந்த பொசிஷன்ல ஆரோனியன் Rf3 விளையாண்டார், more of a pretty one than anything!

26…Rf3!?

ரொம்ப ஷாக்காகி போன கார்ல்ஸன் ஒரு sub optimal continuation விளையாண்டார்.

(more…)

கேண்டிடேட்ஸ் டோர்னமெண்ட் 2007

Friday, May 25th, 2007

Chess Candidate Matches (2007)

கேண்ட்டிடேட்ஸ் மேட்ச் நாளைக்கு Elistaல ஆரம்பிக்குது. 16 பேர் விளையாடறாங்க.

  1. Levon Aronian (ARM)
  2. Peter Leko (HUN)
  3. Ruslan Ponomariov (UKR)
  4. Boris Gelfand (ISR)
  5. Etienne Bacrot (FRA)
  6. Alexander Grischuk (RUS)
  7. Judith Polgar (HUN)
  8. Alexei Shirov (ESP)
  9. Michael Adams (ENG)
  10. Evgeny Bareev (RUS)
  11. Vladimir Malakhov (RUS)
  12. Gata Kamsky (USA)
  13. Rustam Kasimjanov (UZB)
  14. Sergei Rublevsky (RUS)
  15. Mikhail Gurevich (TUR)
  16. Magnus Carlsen (NOR)

இதுல டாப் நாலு பேர், World champiojnship tournamentக்கு select ஆவாங்க. ஏற்கனவே அந்த டோர்னமெண்ட்டுக்கு க்ராம்னிக், ஆனந்த், ஸ்விட்லர், மொரொசெவிச் செலக்டட், அவங்களோட இந்த நாலு பேரும் சேர்ந்துப்பாங்க. இதுல எங்கயுமே டோப்பலோவ் இல்லை, கவனிச்சீங்களா? அதான் அவங்களோட (க்ராம்னிக் - டோப்பலோவ்) மேட்ச்சோட clause! :)

இதான் முதல் ரவுண்ட் pairings:

1. Aronian Levon      (ARM) - Carlsen Magnus      (NOR)

2. Leko Peter         (HUN) - Gurevich Mikhail    (TUR)

3. Ponomariov Ruslan  (UKR) - Rublevsky Sergei    (RUS)

4. Gelfand Boris      (ISR) - Kasimdzhanov Rustam (UZB)

5. Bacrot Etienne     (FRA) - Kamsky Gata         (USA)

6. Grischuk Alexander (RUS) - Malakhov Vladimir   (RUS)

7. Polgar Judith      (HUN) - Bareev Evgeny       (RUS)

8. Shirov Alexei      (ESP) - Adams Michael       (ENG)

பலத்த போட்டின்னு பார்த்தீங்கன்னா ஆடம்ஸ், லீகோ, ஆரோனியன், பொனமரியோவ், போல்கர், கசிம்ட்ஜனோவ் & காம்ஸ்கிக்குள்ளத்தான் இருக்கும். வெறுமனே நாலு பேரு மட்டுமே செலக்ட் ஆவாங்கன்றனால கேம்ஸ்லாம் ரொம்பவே இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும், ஷார்ட் ட்ராஸ்லாம் அவ்வளவு இருக்காதுன்னு நினைக்கிறேன், பார்ப்போம்!

Mtel Masters 2007 - ரவுண்ட் 10

Friday, May 25th, 2007

Topalov - Sasikiran (Round 10, MTel masters 2007)

அது எப்படி கரெக்ட்டா கடைசி கேம் விறுவிறுப்பா வர மாறி அமையறதுன்னு எனக்கு புரியலை, ஆனா நிறைய தடவை இதை கவனிச்சிருக்கேன், முக்காவாசி கடைசி ரவுண்ட்ல டோர்னமெண்ட் லீடிங்ல இருக்கிறவங்க இரண்டு பேர் விளையாடற மாதிரிதான் pairings வந்துரும். MTel-லயும் இது மாதிரிதான் - டோப்பலோவும் சசியும் கடைசி ரவுண்ட்ல விளையாடினாங்க. யாரு வின் பண்ணுறாங்களோ அவங்க டோர்னமெண்ட் க்ளியர் வின்னர்ன்ற மாதிரி இருந்தது, சசிக்கு ட்ரா பண்ணினாலே போதும், க்ளியர் வின்னர் ஆயிருப்பார். ஆனா, நடுவுல ஒரு சின்ன ப்ளண்டர் பண்ணினதுனால ஃபுல் பாயிண்ட்டையும் lose பண்ணற மாதிரி ஆயிடுச்சு. இதை பத்தின முழு ரிப்போர்ட் படிக்க இங்கே க்ளிக்கவும்.

Final standings:

Final Standings

பாயிண்ட்ஸ் டேபிள் பாருங்க, வின்னருக்கும், டோர்னமெண்ட் கடைசி ஆளுக்கும் 1 பாயிண்ட்தான் வித்தியாசம். அதே மாதிரி வின்னர் வெறும் +1ல ஜெயிச்சிருக்கார், இந்த மாதிரி ஒரு டாப் லெவல் டோர்னமெண்ட்ல இதுக்கு முன்னாடி ஆயிருக்கான்னு தெரியலை.

சசிக்கு இந்த டோர்னமெண்ட்ல 6 ELO பாயிண்ட்ஸ் வந்திருக்கு (இந்த டோர்னமெண்டுக்கு அப்புறம் 2696 இருக்கணும் அவரோட ரேட்டிங்). டோர்னமெண்ட்டை ஜெயிச்சாலும், டோப்பலோவ் 4 பாயிண்ட் கிட்ட விடறார். ஆக மனுஷனோட ரேட்டிங்  ரிவர்ஸ் கியர்ல போயிண்டிருக்கு. போற போக்குல க்ராம்னிக் சீக்கிரமே இரண்டாவது பொசிஷனுக்கு வந்திருவார்னு நினைக்கிறேன். ஆனந்த் comfortable-லா ஒரு 20+ பாயிண்ட்ஸ் differenceல ஃபர்ஸ்ட் இருக்கார், அவருக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு கவலை இல்லை.

அடுத்து கேண்ட்டிடேட்ஸ் ஆரம்பிக்க போகுது, ஏறகனவே Bosna torunamentம் Capablanca memoral tournamentம் நடந்துண்டு இருக்கு, So இன்னும் கொஞ்ச நாளைக்கு செஸ் ஆட்டங்களுக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இருக்காது! ஜாலிதான் :)

MTel Masters 2007 - ரவுண்ட் 9

Friday, May 25th, 2007

இரண்டு ரவுண்டுகளே மீதி இருந்த நிலைமையில். டோர்னமெண்ட் லீடர் சசிக்கு டோர்னமெண்ட்டையே வின் பண்ணிண்டு போக நிறைய சான்ஸ் இருந்தது. ஒன்பதாவது ரவுண்டில் சசி - நிசிபியானோவ் விளையாண்டாங்க.

சசிகிரண் - நிசிபியானோவ்

(Mtel Masters 2007, Round 9)

1.Nf3 c5 2.c4 g6 3.d4 cxd4 4.Nxd4 Nc6 5.e4 Bg7 6.Be3 Nf6 7.Nc3 0-0 8.Be2 b6 9.0-0 Bb7 10.f4 Nxd4 11.Bxd4 Rc8 12.Qd3 d6 13.Rad1 Qc7 14.Kh1 Rfe8 15.e5 dxe5 16.fxe5 Nh5 17.Nd5 Bxd5 18.cxd5 Bxe5 19.Bxh5 Bxd4 20.Qxd4 gxh5 21.Rd3 e5 22.Qh4 Qd6 23.Qxh5 Kh8 24.Rg3 f6

Sasikiran - Nisipeanu (MTel 2007, Round 9)

(more…)

MTel Masters 2007 - ரவுண்ட் 8

Wednesday, May 23rd, 2007

Sasikiran - Kamsky (MTel 2007, Round 8)

எட்டாவது ரவுண்ட்ல காம்ஸ்கி சசியை தோக்கடிச்சாரு. இது ஒரு Slav defense, ஒரு 20 மூவ் போல பொசிஷன் நல்லா க்ளோஸ்ட்டாத்தான் இருந்தது, சசி க்வீன் சைட்ல கேஸ்ட்லிங் பண்ணினார், காம்ஸ்கியோட கிங் செண்டர்லதான் இருந்தது. பொசிஷன் க்ளோஸ்டா இருந்ததுனால காம்ஸ்கி அதை பத்தி ரொம்ப கவலை படலை, இரண்டு சைட்டும் பயங்கர பொசிஷனல் maneuvering, கொஞ்ச நேரத்துக்கு மேல கேம்ல என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலை! ப்ளாக்கின் 40வது மூவ்வுக்கு அப்புறம் பொசிஷன் இப்படி இருந்தது.

Sasikiran - Kamsky (MTel 2007, Round 8)

இந்த இடத்துல ப்ளாக் Nxd4 / Nxd2 threaten பண்ணுது. வொயிட்னால Qd1ம் விளையாட முடியாது, ஏன்னா ப்ளாக் Re1 விளையாடி க்வீனை வின் பண்ணிடும் (actualலா minor piece compensation இருக்கும்), so sasi அந்த தொல்லை பிடிச்ச knightட எடுத்துடறதுன்னு முடிவு பண்ணினார்.

(more…)


Close
E-mail It