Archive for the ‘Tidbits’ Category

[Offtopic] கொடுமை சாமி!

Monday, May 14th, 2007

திடீர்னு வெள்ளிக்கிழமை இந்த ப்ளாக் வொர்க் பண்ணலை. சரி, ஏதாவது சின்ன ப்ராப்ளமாத்தான் இருக்கும்னு பார்த்தா, என்ன பண்ணினாலும் தலைவர் வொர்க் ஆகலை. Database-ல இருக்கிற ப்ளாக் செட்டிங்ஸ்லாம் வேற corrupt ஆயிருந்தது. Fortunately posts data கரெக்ட்டா இருந்தது, வேக வேகமா அதை முதல்ல ஒரு காப்பி எடுத்துண்டேன். ஒரு ரீசண்ட் பேக்கப் இல்லாத்தால் என்னால அந்த corrupt செட்டிங்ஸ் டேபிளை சரி பண்ண முடியலை. வீக் எண்ட் முழுசா இதை ஒவ்வொண்ணா ட்ரை பண்ணி பண்ணி பார்த்து ஒரு வழியா இன்னிக்கு (Monday) கார்த்தால சரி பண்ணிட்டேன். தலைவர் இப்போ பழைய மாதிரி ஒழுங்கா வொர்க் ஆகறார் (hopefully!).

Moral of the story என்னன்னா, சொந்தமா ப்ளாக் ஹோஸ்ட் பண்ணறவங்க ஒழுங்கா இரண்டு நாளைக்கு ஒரு தடவையாவது backup எடுத்து வச்சிக்குங்க. இல்லைன்னா ஒரு வீக் எண்ட்டாவது வேஸ்ட் பண்ணற மாதிரி ஆயிடும், என்னய மாதிரி!

ஆனந்தோட செஸ் விளையாட ஒரு சான்ஸ்

Sunday, April 15th, 2007

ICC

Vidyasagar

ஆனந்தோட விளையாடறதுக்காக ICC eBay-ல ஒரு 15 பொசிஷன்கிட்ட auction பண்ணிண்டு இருக்கு. சில bids-லாம் $350 வ்ரைக்கும் ரீச் ஆயிருக்கு. $350 மற்றும் $500 கொடுக்கறவங்களுக்கு, ஒரு வருஷம் New in Chess free மாதிரி, ICC நிறைய offers-லாம் வேற கொடுக்குது. இதுல கலெக்ட் ஆகற பைசா எல்லாம் நம்ப சென்னைல இருக்கிற Vidyasagar spastic society-க்கு கொடுக்கப்படும். ரொம்ப நல்ல விஷயம். இந்த event April 21st ICC-ல நடக்கும்.

இதுல பங்கேற்கணும்னு நினைச்சிங்கன்னா சீக்கிரம் eBayக்கு போங்க, இன்னும் 4 நாள்ல எல்லா bids-ம் close ஆயிடும்.

Links:

ஆனந்த் பெற்றோர் பேட்டி

Wednesday, April 4th, 2007

Anand - World #1(c) canal-h.net

ஆனந்த் world #1 ஆனதை பத்தி Rediff.com ஆனந்த் parentsகிட்ட ஒரு பேட்டி எடுத்து போட்டிருக்காங்க.

ஒரு சில interesting quotes:

We also had an occasion to watch him play Kasparov. The first seven games were drawn, and then Anand won the eighth game. My goodness! You should have seen Kasparov’s behaviour. I said, “I don’t want Anand to win at all if that man is going to behave that way.”

He [Kasparov] was so abrupt after the game that he knocked out all the doors and made so much noise. He doesn’t take defeat like a sportsman.

Even when he beat highly-ranked players there was no show of arrogance. I still remember when he beat Manuel Aaron, who was then the National champion, as a child, there was no reaction from Anand, though Aaron was stunned. Emotional outbursts are dangerous. I am happy that he is a balanced person.

அதே மாதிரி, ஆனந்துக்கு Medical & Engineering collegeல அட்மிஷன் கிடைச்சதுன்றது நியூஸ், இதுக்கு முதல்ல எதுலயும் நான் படிச்சதில்லை. They have every reason to be proud!

Sports star மேகசினில் ஆனந்த்

Thursday, March 29th, 2007

Anand in Sportsstar

Sports star-ல இநத மாசம் ஆனந்தை பத்தி ஒரு ஆர்டிகிள் வந்திருக்கு. ஆனந்த் வேர்ல்ட் நம்பர் 1 ஆனது, அவர் எப்படி இந்த இடத்துக்கு வந்தாரு அப்படின்றதை பத்தியெல்லாம் நல்லாவே எழுதிருக்காங்க. இதை நான் போன வாரம் ஹைதராபாத் போயிருந்த போது ஆனந்த் போட்டோவை பார்த்து வாங்கினேன், ஆனந்த்தோட பேட்டில்லாம் எதுவும் இல்லை. ஆனா Centerfold photo ஆனந்த்தான் (Left-ல இருக்கிற இமேஜ்)

BTW, Sports star மேகசின் ரொம்ப நாளைக்கு (வருஷத்துக்கு!) அப்புறம் வாங்கறேன். முன்னாடியெல்லாம் எங்கண்ணன் வாரம் வாரம் வாங்கிண்டு வந்ததெல்லாம் ஞாபகப்படுத்திடுத்து, இந்த் Sports star. அப்போ லுக்கே வேற மாதிரி இருந்த மாதிரி ஞாபகம் (மேகசின் மாதிரி), இப்போ Express computer மாதிரி ஆக்கிட்டாங்க. Anyway, good read!

தமிழ்மணம் plugin updated

Thursday, March 22nd, 2007

தமிழ்மணம் plugin-னை அப்டேட் பண்ணி அப்லோட் பண்ணிருக்கேன். இந்த புது வேர்ஷன்ல Blogdesam.com-கான சப்போர்ட்டும் இருக்கு. இதை யூஸ் பண்ணி நீங்க Thamizmanam இல்லை Blogdesam, இல்லை இரண்டுக்குமே தேவையான toolbar code-ஐ ஒரே நேரத்துல சேர்க்கலாம். யூஸ் பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

ஏற்கனவே இந்த plugin உங்க வெப்சைட்டில் install பண்ணியிருந்திங்கன்னா, just பழைய files-சையெல்லாம் புது version-ல இருக்கிற files வச்சு overwrite பண்ணிடுங்க. ஒரு ப்ராப்ளமும் இருக்க கூடாது. ஏதாவது ப்ராப்ளம் இருந்தா இங்க போஸ்ட் பண்ணுங்க.

இந்த plugin self-hosted Wordpress blogக்கு மட்டுமே. இதை wordpress.com போன்ற தளங்களில் யூஸ் பண்ண முடியாது.

Is Kasparov copying Fischer?

Tuesday, March 20th, 2007

காஸ்பரோவ் புதுசா ஒரு புக் எழுதியிருக்கார், பெயர் “How life imitates chess“. இது இன்னும் ரிலீஸ் ஆகலை (என்னமோ சூப்பர் ஸ்டார் படம் மாதிரி :-p ), அக்டோபர் போலத்தான் ஆகும் போல இருக்கு. இதோட front cover decide ஆயாச்சு, Chessninja-ல Mig போட்டிருக்கார். அதை பார்த்த உடனே எனக்கு ஏற்கனவே வெளியே வந்த “Bobby fischer goes to war” புக்தான் ஞாபகம் வந்தது (அதை பத்தின என்னோட பழைய போஸ்ட் இங்கே) . காஸ்பரோவோட புக்கின் அட்டை படம் அப்படியே பாபி ஃபிஷரை பத்தின புக்கின் அட்டையை போலவே இருக்கு, இல்லையா?

Fischer bookKasparovs book. Thanks MIG (Chessninja)

இரண்டு பேரோட நிழலுமே கிங்!! direction மட்டும்தான் வேற. இப்போ சொல்லுங்க, காஸ்பரோவ் ஃபிஷரை பார்த்து காப்பி அடிக்கிறாரா இல்லையா?! ;-)


Close
E-mail It