Archive for the ‘Tutors’ Category

அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு சின்ன அறிமுகம் [Part 2]

Friday, June 1st, 2007

பாகம் 1ல் நாம் கட்டங்களின் பெயர்களை பற்றியும், காய் நகர்த்தலை எப்படி குறிப்பது என்றும் பார்த்தோம். இந்த பாகத்தில் நாம் கீழே இருப்பவைகளை எப்படி குறிப்பது என்று பார்ப்போம்.

  1. வெட்டுதல்
  2. கேஸ்ட்லிங் (ஷார்ட் மற்றும் லாங்)
  3. இராஜாவுக்கு செக் வைத்தல்.
  4. சிப்பாய் கடைசி ரேங்கினை சென்றடைந்து மற்றொரு காயாக மாறுவது
  5. மற்ற ஆட்டக் குறியீடுகள்

முதல்ல காய் வெட்டுதலை குறிப்பதற்கு ஒரு டெம்ப்ளேட் ரெடி பண்ணுவோம். “X” என்பது வெட்டுவதை குறிக்கும்.

{Piece குறியீடு}{இருக்கும் இடம்} X {வெட்டப்பட்ட காய் இருக்கும் கட்டம்}

இப்பொ இந்த டெம்ப்ளேட்டை எப்படி உபயோகப்படுத்தறதுன்னு பார்ப்போம்.

படம் 1

[படம் 1]

படம் 1ஐ பாருங்கள். வெள்ளை பக்க ஆட்டக்காரர் விளையாட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்; E5ல் இருக்கும் சிப்பாய் (Pawn), D6ல் இருக்கும் பிஷப்பையோ அல்லது F6ல் இருக்கும் குதிரையையோ வெட்டலாம். (எப்படி e5, d6, f6ன்னு குழப்பமா இருந்ததுன்னா, ஒரு தடவை பாகம் 1ஐ படிச்சுக்குங்க). குதிரையை சிப்பாய் வெட்டறார்னு வச்சிப்போம், அதை e5 x f6 என்று எழுதணும். படம் 1ல், வெட்டும் காய் சிப்பாய் என்பதால் அதற்க்கு ஒற்றெழுத்து குறியீடு கிடையாது. e5 x f6என்பதை இன்னும் சுருக்கி e x f6 என்று எழுதினாலே போதுமானது.

(more…)

செஸ் வீடியோஸ் & ட்யூட்டர்ஸ்

Tuesday, May 8th, 2007

Chess Tutors

இரண்டு க்விக் அப்டேட்ஸ்

  • செஸ் வீடீயோக்களுக்காக தனியாக ஒரு வலைத்தளம் (http://chessvideos.jumbledthoughts.com) ஒண்ணு செட் பண்ணிருக்கேன். இதுல Google Videos, Youtube மாதிரியான வீடியோ வலைத்தளங்களில் அப்லோட் ஆகிற செஸ் சம்பந்தமான வீடியோக்களுக்கான லிங்ஸ் இங்கே லிஸ்ட் பண்ணுவதாக ப்ளான். இந்த சைட்டில் இன்னும் லிஸ்ட் ஆகாத புது/பழைய வீடியோக்கள் ஏதாவது பார்த்தீங்கன்னா, ப்ளீஸ் எனக்கு அதை தெரிவியுங்க.
  • Detailed-டா ஒவ்வொரு செஸ் motif-ஐயும் விளக்கி ஒரு வீடியோவோ, இல்லை ஒரு ஆர்டிகிளோ போஸ்ட் பண்ணுவதாக இருக்கிறேன். படிப்பவர்கள் வ்சதிக்காக அனைத்தையும் ஒரே பக்கத்தில் லிஸ்ட் பண்ணிருக்கிறேன். எதையெல்லாம் கவர் பண்ணவேண்டும் என்று முடிவு பண்ணி அந்த பக்கத்தில் லிஸ்ட் பண்ணிருகேன், அதை பாருங்க, பார்த்துட்டு ஏதாவது இண்ட்ரெஸ்டிங் டாபிக் மிஸ் ஆயிருந்தா சொல்லுங்க, அப்டேட் பண்ணிடுவோம்.

அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு சின்ன அறிமுகம் [Part 1]

Monday, May 7th, 2007

செஸ்சுக்கும் மற்ற ஆட்டங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. டெண்டுல்கர் லீ பந்தை சிக்ஸர் அடித்தார் என்றால் அதை நம்மால் டிவியில் பார்த்து ரசிக்க மட்டுமே முடியும். ஒரு பேட்டும் பாலும் நம்மிடம் இருந்தாலும் நம்மால் டெண்டுல்க்கரின் அந்த சிக்ஸரை திரும்பி அடித்து பார்க்க முடியாது. ஆனால் செஸ்ஸில் க்ராம்னிக்கும் லீகோவும் சென்ற வாரம் விளையாடியதை நம்மால் விளையாடியே பார்க்க முடியும். சென்ற வாரம் நடந்தது மட்டும் இல்லை, 100 வருடத்திற்கு முன்னால் யாரோ விளையாடிய ஒரு ஆட்டத்தை கூட நாம் இன்று விளையாடிப்பார்க்க முடியும். “அதெப்படி”னு யோசிக்கறீங்களா? அங்கேதான் இந்த செஸ் குறியீடு உபயோகமாகுது.இதை பற்றி பார்ப்பதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை ஒரு முறை பார்த்திடுவோம்.

Board position

[படம் 1]

மேலே இருக்கிற போர்ட் படத்தை (படம் 1) பாருங்க. இதுதான் ஆட்டத்தின் ஆரம்ப பொசிஷன். வெள்ளை கட்டம் (படம் 1ல் வட்டத்துக்குள் இருப்பது) வலது பக்கம் இருக்குமாறு போர்ட் இருக்க வேண்டும். எப்படி காய்களை அடுக்க வேண்டும் என்பதையும் இப்படம் காண்பிக்கிறது.

Files

[படம் 2]

படம் 2ல் குறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காலம்ன் (column)னும் A முதல் H வரை பெயர் கொண்டு அழைக்கப்படும். செஸ்ஸில் காலம்ன் (column) என்பதை பைல் (file) என்று சொல்வார்கள். படம் 1ல் இருக்கும் காய்கள் படம் 2ல் எங்கெங்கு வைக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள் (more…)

இரண்டாம் செஸ் வீடியோ: Spassky - Bronstein, 1960

Monday, May 7th, 2007

அப்பாடி, ஒரு வழியா என்னோட இரண்டாவது வீடியோவையும் ரிக்கார்ட் பண்ணி அப்லோட் பண்ணியாச்சு. இந்த வீடியோவில் Boris Spassky - David Bronstein game-மை ப்ளே பண்ணி record பண்ணிருக்கேன். இதை பார்த்துட்டு வழக்கம் போல எனக்கு feedback தருவீங்கன்னு எதிர்பார்க்கறேன். TIA.

Loading...

இந்த ஆட்டத்தின் PGN டவுன்லோட் பண்ண இங்கு க்ளிக்குங்கள் - Spassky - Bronstein (PGN)

என் முதல் செஸ் வீடியோ: Tal - Miller, 1988

Sunday, April 15th, 2007

ரொம்ப நாளா ஒரு செஸ் வீடியோ ஒண்ணு பண்ணிடனும்னு இருந்தேன், ஒரு வழியா இன்னிக்கு கொஞ்சம் டைம் கிடைச்சது (என்னோட வீட்டுக்காரம்மாவுக்குத்தான் தேங்ஸ் சொல்லணும்). இந்த வீடியோவில் Mikhail Tal - Miller game-மை ப்ளே பண்ணி record பண்ணிருக்கேன், வீடியோவை Google-ல அப்லோட் பண்ணிட்டு பார்த்தா கொஞ்சம் pixelated-டா ஆயிடுச்சு. Hopefully it is clear enough to understand.

Google videos-ல அப்லோட் பண்ணுறவங்க, என்ன codec use பண்ணினா நல்ல க்வாலிட்டி இருக்கும்னு சொன்னிங்கன்னா helpful-லா இருக்கும்.

Loading...

இந்த வீடியோவை பத்தி உங்களோட கருத்துக்களை சொன்னீங்கன்னா I’d be greatful. Please post your feedback here. TIA.


Close
E-mail It